முகப்பு
வணிகம்

அரசு பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு

ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

Updated On : 21 ஜூன் 2013, 11:15 pm IST
பகிர்:

ரூ. 39ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

அரசு கடன் பத்திர ஏலத்தினை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான "செபி' வியாழக்கிழமை நடத்தியது. அப்போது ரூ. 39 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்யக் கூடிய முதலீட்டின் உச்ச வரம்பு ரூ. 42 ஆயிரத்து 22 கோடியாகும். இதில் ரூ. 39 ஆயிரத்து 171 கோடி மதிப்பில் கடன் பத்திரங்களை இந்நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இது 93 சதவீதமாகும். எஞ்சியுள்ள ரூ. 2,851 கோடி மதிப்பிலான பங்குகளுக்கும் கூடுதல் ஒதுக்கீடுகளுக்கும் அடுத்த மாதம் ஏலம் நடைபெறும். 37 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.