முகப்பு
வணிகம்

பவுனுக்கு ரூ.280 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஆக.1) பவுனுக்கு ரூ.280 குறைந்தது. இதையடுத்து சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 248-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 2:37 am IST
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஆக.1) பவுனுக்கு ரூ.280 குறைந்தது. இதையடுத்து சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 248-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் வியாழக்கிழமை தங்கத்தின் விலை குறைந்தது. புதன்கிழமை (ஜூலை 31) 1332 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் வியாழக்கிழமை (ஆக.1) 1325 டாலர்களாக குறைந்தது.

இதைத் தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வியாழக்கிழமை முன்னேற்றம் காணப்பட்டது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தங்கத்தின் விலை குறைந்ததன் எதிரொலியாக வெள்ளி விலையும் சரிந்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.695 குறைந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.41 ஆயிரத்து 525-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை மார்க்கெட் நிலவரம்:-

ஒரு கிராம் - ரூ. 2656

ஒரு பவுன் - ரூ.21248

ஒரு கிராம் வெள்ளி - ரூ.44.40

ஒரு கிலோ கட்டி வெள்ளி  - ரூ.41525

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.