முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்துள்ளது. எந்தெந்த மாடல், எவ்வளவு விலை அதிகரித்துள்ளது என்பது குறித்து...
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக ஐகியூ, விவோ நிறுவனங்களின் சில மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இருந்த, ஐகியூ 15, 15ஆர், நியோ 10 மற்றும் விவோ டி5 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இவற்றின் விலை ஏற்றம் தற்போது சந்தையில் அமலுக்கு வந்துள்ளது. இணைய விற்பனை தளங்களிலும் இந்த விலை ஏற்றம் பிரதிபலித்துள்ளது.
Advertisement
Advertisement
ஸ்மார்ட்போன் தயாரிப்புக்குத் தேவையான உதிரி பாகங்களின் விலை, குறிப்பாக நினைவக அட்டை (மெமரி சிப்) போன்றவற்றின் உற்பத்தி குறைந்துள்ளதால், இந்த விலை ஏற்றம் நடந்துள்ளது.
விலை மாற்றம்
அதிகபட்சமாக விவோ டி5 ப்ரோ வரிசையில் உள்ள ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விவோ டி5 ப்ரோ 8GB உள்நினைவகம் 128G நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 29,999 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 32,999 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று 8GB உள்நினைவகம் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 33,999 ஆக இருந்த நிலையில், ரூ. 36,999 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக ரூ. 3000 கொடுக்க வேண்டியுள்ளது.
ஐகியூ நிறுவனத்தில் பல்வேறு மாடல்களின் விலை அதிகரித்துள்ளது. ஐகியூ 15 மாடல் 12GB உள்நினைவகம் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை விலை ரூ. 72,999 ஆக இருந்தது. தற்போது ரூ. 74,999 ஆக அதிகரித்துள்ளது.
12GB உள்நினைவகம் 512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 2,000 அதிகரித்து, ரூ. 81,999 ஆக உள்ளது.
8GB + 128GB நினைவகம் உடைய ஐகியூ 15ஆர் ஸ்மார்ட்போன் விலை ரூ. 47,999.
12GB + 256GB நினைவகம் உடைய ஐகியூ 15ஆர் ஸ்மார்ட்போன் விலை ரூ. 52,999
12GB + 512GB நினைவகம் உடைய ஐகியூ 15ஆர் ஸ்மார்ட்போன் விலை ரூ. 59,999.
8GB + 256GB நினைவகம் உடைய ஐகியூ நியோ 10 விலை ரூ. 37,999
12GB + 256GB நினைவகம் உடைய ஐகியூ நியோ 10 விலை ரூ. 42,999.
ஒவ்வொரு மாடல் ஸ்மார்ட்போன்களிலும் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை விலை அதிகரித்துள்ளது.