FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டாடா கார் வாங்குவோருக்கு ஷாக்! செப். முதல் விலை உயர்கிறது!

டாடா கார்களின் விலை செப்டம்பர் முதல் விலை உயர்வது பற்றி..

டாடா கார் - file photo
பகிர்:

டாடா கார்களின் விலை வரும் செப்டம்பர் மாதம் முதல் உயர உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய வாகனச் சந்தையில் ஹேட்ச்பேக் முதல் பெரிய பிரீமியம் எம்யூவி வரையிலான கார்களைக் கொண்ட டாடா மோட்டர்ஸ் வெற்றிகரமான நிறுவனமாக இன்று வரை திகழ்ந்து வருகின்றது. மின்சார வாகன பிரிவிலும் நெக்ஸ்ன் இவி, பஞ்ச் இவி, சீரா இவி, டியாகோ போன்ற பல்வேறு வகையான வாகனங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை செப்டம்பர் 1 முதல் ரூ. 25 ஆயிரம் வரை உயர உள்ளது.

Advertisement

Advertisement

பணவீக்கம், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு, பேட்டரி செலவு அதிகரிப்பு, அந்நிய செலாவணி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு பெட்ரோவ், டீசல் மற்றும் எலெக்ரிக் மாடல்களில் சிலவற்றுக்குப் பொருந்தும். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு உயர்வு என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Tata Motors To Hike Prices Across Its Model Range 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments