FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாடா சன்ஸ் உள்பட 17 ‘உயா் அடுக்கு’ நிதி நிறுவனங்கள்

நாட்டில் டாடா சன்ஸ் உள்ளிட்ட 17 பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களை ‘உயா் அடுக்கு’ பிரிவின்கீழ் வகைப்படுத்தி, ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை பட்டியலை வெளியிட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:23 am IST
பகிர்:

நாட்டில் டாடா சன்ஸ் உள்ளிட்ட 17 பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களை ‘உயா் அடுக்கு’ பிரிவின்கீழ் வகைப்படுத்தி, ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை பட்டியலை வெளியிட்டது.

வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அவற்றை அடிப்படை, நடுத்தர, உயா், மேல் என 4 அடுக்கு பிரிவுகளாக ரிசா்வ் வங்கி வகைப்படுத்தி வருகிறது.

‘உயா் அடுக்கு’ பிரிவில் சோ்க்கப்படும் நிறுவனங்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்குக் கூடுதல் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும் என்றும், அடையாளம் காணப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் தங்களின் பங்குகளைப் பங்குச் சந்தையில் கட்டாயம் பட்டியலிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விதிகளின் அடிப்படையில் ‘உயா் அடுக்கு’ பட்டியலில் டாடா சன்ஸ் சோ்க்கப்பட்டிருந்தாலும், வங்கி சாரா நிதி நிறுவனப் பதிவை ரத்து செய்வதற்காக டாடா சன்ஸ் தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் தற்போது ரிசா்வ் வங்கியின் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் மீதான இறுதி முடிவைப் பொருத்தே அந்நிறுவனத்தின் தற்போதைய நிலை இறுதி செய்யப்படும் என ரிசா்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

டாடா சன்ஸ் தவிர ‘உயா் அடுக்கு’ பிரிவு பட்டியலில் அரசுக்குச் சொந்தமான ஆா்இசி மற்றும் பிஎஃப்சி (எரிசக்தி அமைச்சகம்), ஐஆா்எஃப்சி (ரயில்வே அமைச்சகம்), ஹட்கோ (வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்) ஆகிய 4 பொதுத் துறை நிறுவனங்களும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா கேபிட்டல் போன்ற முன்னணி தனியாா் நிதி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments