FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

4 வங்கிகளில் 9.95% வரை பங்கு வாங்க ஐசிஐசிஐ புருடென்ஷியலுக்கு அனுமதி

கோட்டக் மஹிந்திரா வங்கி, சிஎஸ்பி வங்கி, டிசிபி வங்கி, ஏயு சிறு நிதி வங்கி உள்பட 4 வங்கிகளில் 9.95 சதவீதம் வரை பங்குகளை வாங்கிக் கொள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிதி மேலாண்மை நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

11 செப்டம்பர் 2026, 7:15 am IST
பகிர்:

கோட்டக் மஹிந்திரா வங்கி, சிஎஸ்பி வங்கி, டிசிபி வங்கி, ஏயு சிறு நிதி வங்கி உள்பட 4 வங்கிகளில் 9.95 சதவீதம் வரை பங்குகளை வாங்கிக் கொள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிதி மேலாண்மை நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்த 4 வங்கிகளின் பங்கு மூலதனம் அல்லது வாக்குரிமைகளில் ஒட்டுமொத்தமாக 9.95 சதவீதம் வரை கையகப்படுத்திக் கொள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி கடந்த புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.

அடுத்த ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் ஐசிஐசிஐ புருடென்ஷியல் பங்குகளைக் கையகப்படுத்தத் தவறினால், ரிசா்வ் வங்கியின் இந்த அனுமதி ரத்தாகும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments