FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளிநாட்டு கடன் வரம்பை இரட்டிப்பாக்கிய ஐசிஐசிஐ வங்கி!

ஐசிஐசிஐ வங்கி தனது வெளிநாட்டு கடன் வரம்பை 2.5 பில்லியன் டாலரிலிருந்து 5 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 8:35 pm IST
ஐசிஐசிஐ வங்கி
பகிர்:

புதுதில்லி: ஐசிஐசிஐ வங்கி தனது வெளிநாட்டு கடன் வரம்பை 2.5 பில்லியன் டாலரிலிருந்து 5 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கியின் வணிக வளர்ச்சிக்காக, பத்திரங்கள் மூலம் பெறப்படும் வெளிநாட்டுக் கடன்களின் அளவை 5 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கி ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாட்டுச் சந்தையில் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவை வெளியிடுவதன் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் தொகையைத் திரட்ட நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, ஜூலை 18 ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில், வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து கடன் பெறுவதற்கான வரம்பை 2.5 பில்லியன் அமெரிக்க டாலராக வங்கி நிர்ணயித்திருந்தது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஐசிஐசிஐ வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ. 15,440 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 13,558 கோடியாக இருந்தது.

தனியார் துறையின் 2வது மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 14,804 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இது ரூ. 12,768 கோடியாக இருந்தது.

summary

ICICI Bank on Friday said its board has doubled overseas borrowings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments