டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளது பற்றி...
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தனது பதவியை இன்று (ஆக. 12) ராஜிநாமா செய்துள்ளார்.
டாடா குழுமத் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்றார் சந்திரசேகரன். அவரது பதவிக்காலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா எதிர்த்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து சந்திரசேகரன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் 40 ஆண்டு காலப் பணியை நிறைவு செய்துள்ளேன். மிகவும் மதிப்பிற்குரிய இந்த நிறுவனத்திற்குப் பங்களிக்கும் வகையில் மிகுந்த மனநிறைவு தரும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், ஒரு முக்கியப் பொறுப்பாகவும் இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். தான் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
வருகிற ஆக. 18 ஆம் தேதி டாடா குழும பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சந்திரசேகரன் பதவி விலகியுளளார்.
சந்திரசேகரன் கடந்த 1987ல் டாடா நிறுவனத்தில் இணைந்து 2009ல் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து பின்னர் 2017 முதல் டாடா சன்ஸ் மட்டும் டாடா குழுமத் தலைவராக இருந்து வந்தார்.
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளதால் டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் உள்ளிட்ட டாடா குழுமப் பங்குகள் 3% வரை சரிந்துள்ளன.
N Chandrasekaran resigns as chairman of Tata Sons
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.