FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்

இசக்கி சுப்பையா விவகாரத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அளித்த விளக்கம் பற்றி....

9 வினாடிகள் முன்பு
பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்
பகிர்:

இசக்கி சுப்பையா விவகாரத்தில் பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதிலை அறிவிப்பேன் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியில், அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் ஒத்துழைப்புடன் சட்டப்பேரவை மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை முதல்வரின் பதிலுரை உள்ளது. இந்த பொறுப்பில் என்னை அமரவைத்த முதல்வரையே பெருமைகள் அனைத்தும் சேரும்.

அனைத்து எம்எல்ஏக்களும் சரியான ஒத்துழைப்பை தந்துகொண்டிருக்கிறார்கள். அனைத்து எம்எல்ஏக்களும் தமிழக மக்களுக்காக செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் அதிகமாக செயலாற்றுவார்கள் என நம்புகிறேன். ராஜிநாமாவை திரும்பப்பெறும் விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா என்னிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

கடிதம் எனது ஆய்வில் உள்ளது. சட்டப்பேரவை முடிந்தவுடன் அதற்கான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார். இசக்கி சுப்பையா அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் அண்மையில் இணைந்தார். தற்போது அந்த ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்து பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்துள்ளாா்.

இந்தக் கடிதத்தை ஏற்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இசக்கி சுப்பையாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டு அந்தத் தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் இடைத்தோ்தல் மட்டுமே தீா்வாகும் என சட்டப்பேரவை செயலா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

Assembly Speaker J.C.D. Prabhakar has stated that he will announce his decision on the Isakki Subbaiah issue once the assembly session ends.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments