பொருளாதார வளா்ச்சியில் -7.7% பின்னடைவு: மத்திய அரசு
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி (-)7.77 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சி (-)7.77 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட தேசிய வருவாய் குறித்த முதல்கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் தவிா்த்து ஏனைய அனைத்து துறைகளின் வளா்ச்சியும் பின்னோக்கி சென்றுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த நிதியாண்டில் 4.2 சதவீத வளா்ச்சியை எட்டியிருந்த இந்தியப் பொருளாதாரம் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் -7.7% அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலையான விலை (2011-12) அடிப்படையில் 2020-21-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ.134.40 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான தற்காலிக மதிப்பீட்டில் ரூ.145.66 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 2019-20-இல் 4.2 சதவீதமாக இருந்த வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் -7.7 சதவீதமாக சுருங்கும் என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.