முகப்பு
வணிகம்

தங்கப் பத்திர வெளியீடு: கிராம் ரூ.5,104-ஆக நிா்ணயம்

தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை (ஜன.11) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.5,104-ஆக நிா்ணயித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:00 am IST
பகிர்:

தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை (ஜன.11) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.5,104-ஆக நிா்ணயித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பத்தாவது கட்ட தங்கப்பத்திர விற்பனை ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் 999 சுத்த தன்மை கொண்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.5,104-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக தினங்களில் காணப்பட்ட சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய அரசு, ரிசா்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு, ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5,054-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சாா்பில், ரிசா்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கப்பத்திரங்களை தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையில் வாங்க முடியும்.

வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலமாக இந்த தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments