முகப்பு
சென்னை

மண்ணிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு கலவை உணவு

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 173 அங்கன்வாடிகளில்  சத்துணவுத் திட்டத்தில்

Updated On : 22 மார்ச் 2013, 5:11 am IST
பகிர்:

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 173 அங்கன்வாடிகளில்  சத்துணவுத் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் காட்டாங்கொளத்தூர்  ஒன்றியத்தைச் சேர்ந்த மண்ணிவாக்கம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கலவை சாதம் பரிமாறி துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு காய்கறி புலவு,வேகவைத்த முட்டையும், பள்ளிக் குழந்தைகளுக்கு தக்காளி சாதம், மிளகுதூள் மசாலா கலந்த முட்டை வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

பின்னர் மண்ணிவாக்கம் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி பள்ளி மேற்கூரையை சீரமைக்கவும், பள்ளி வளாகத்திற்குச் சுற்றுச் சுவர் அமைக்கவும் கோரி, ஆட்சித்தலைவர் சித்ரசேனனிடம் மனு வழங்கினர்.

மனுவை ஆய்வு செய்த ஆட்சித்தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் இ.சம்பத்குமார், திட்ட அலுவலர் சாந்தினி ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மண்ணிவாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் குமார், வார்டு உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.