டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிமிங்ஹமில் இன்று (ஜூன் 14) நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபெட் டி லீட் 45 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹீதர் சீகர்ஸ் 16 ரன்களும், ரோபின் ரிஜ் மற்றும் ஐரிஸ் ஸ்விலிங் தலா 13 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
வங்கதேசம் தரப்பில் மரூஃபா அக்தர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபரிஹா த்ரிஷ்னா, ஷனிஜ்தா அக்தர், ரபேயா கான் மற்றும் ரிது மோனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
வங்கதேசம் வெற்றி!
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் தொடக்க வீராங்கனை ஜூரியா ஃபெர்டோஸ் அதிகபட்சமாக 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷர்மின் அக்தர் 37 ரன்களும், திலாரா அக்தர் 26 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் 18 ரன்கள் எடுத்தார்.
நெதர்லாந்து தரப்பில் கரோலின் இரண்டு விக்கெட்டுகளையும், சில்வர் சிகர்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
Bangladesh won by 6 wickets in the match against the Netherlands during the T20 World Cup tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.