முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 27 ஜூன் 2026, 7:43 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீராங்கனைகள் - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குல் ஃபெரோஷா அதிகபட்சமாக அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆயிஷா ஜாஃபர் 32 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

Advertisement

Advertisement

நெதர்லாந்து தரப்பில் ஐரிஸ் ஸ்விலிங் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹீதர் சிகர்ஸ், ஹன்னா லந்தீர், கரோலின் மற்றும் சில்வர் சிகர்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி, 18 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாபெட் டி லீட் 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹீதர் சிகர்ஸ் 24 ரன்களும், ஸ்டெர் கலிஸ் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாத்திமா சனா மற்றும் ஆயிஷா ஜாஃபர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். டையானா மற்றும் நஷ்ரா சாந்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, அதன் கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

summary

Pakistan won the match against the Netherlands by 37 runs in the T20 World Cup tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments