இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்; எச்சரிக்கும் ஆஸி. வீராங்கனை!
டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அழுத்தத்தில் இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அழுத்தத்தில் இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் திடலில் நாளை (ஜூலை 5) நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அழுத்தத்தில் இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அழுத்தத்தில் இருக்கும். அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். நன்றாக விளையாட வேண்டும் என்ற அழுத்தம் அதிகப்படியாக இருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன.
சொந்த மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும். இரண்டு அணிகளுமே வலுவாக இருப்பதால் போட்டி நாளில் நன்றாக விளையாடும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்றார்.
ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக் கோப்பைத் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதில், கடந்த 2012, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Australian player Phoebe Litchfield has stated that the England team will be under pressure in the T20 World Cup final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.