முகப்பு
கிரிக்கெட்

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நீடிக்கிறது.

Updated On : 28 ஜூன் 2026, 7:13 pm IST
- படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நீடிக்கிறது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷோபனா மொஸ்டாரி 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள், ஷர்மின் அக்தர் 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாரிஸேன் காப், ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அரையிறுதி சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக அன்னேரி டெர்க்சன் 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்கள், மாரிஸேன் காப் 16 ரன்கள் மற்றும் நடின் டி கிளர்க் 15 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் நஹிதா அக்தர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிது மோனி, மரூஃபா அக்தர் மற்றும் ஷாஞ்சிதா அக்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்திய மாரிஸேன் காப்புக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 8 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கானப் போட்டியில் நீடிக்கிறது.

summary

South Africa remains in contention for the semi-finals after defeating Bangladesh in the T20 World Cup match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments