முகப்பு
சென்னை

நின்ற பஸ் மீது தண்ணீர் லாரி மோதல்: 6 பேர் படுகாயம்

சென்னை அரும்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த மாநகர பஸ் மீது தண்ணீர் லாரி மோதியதில் நடத்துநர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

Updated On : 22 ஏப்ரல் 2013, 4:02 am IST
பகிர்:

சென்னை அரும்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த மாநகர பஸ் மீது தண்ணீர் லாரி மோதியதில் நடத்துநர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸார் கூறியது: சென்னை கோயம்பேட்டில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பஸ், அரும்பாக்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்தது.

பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது பஸ் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பஸ் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 5 பேர் மற்றும் பஸ் நடத்துநர் கணேசன் ஆகியோர் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

விபத்து தொடர்பாக லாரி டிரைவர் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.