அடையாறு ஆற்றில் ஆண் சடலம்
சென்னை அடையாறு ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருந்ததால் அந்த பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையாறு ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருந்ததால் அந்த பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையாறு பகுதியில் அடையாற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சனிக்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இறந்தவர் யார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement