ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு: இளைஞர்களுக்கு அழைப்பு
நெய்வேலியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பில் சென்னை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெய்வேலியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பில் சென்னை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெளியிட்ட செய்தி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
"சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளவேண்டும். "சிப்பாய் பொதுவான கடமை' பதவியில் சேர 10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
"சிப்பாய் தொழில்நுட்பம் அறிந்தவர்' பதவியில் சேர 8-ம் வகுப்பு படித்தவர்கள் ஜூலை 21-ம் தேதி நடைபெறும் முகாமிலும், "சிப்பாய் எழுத்தர் / ஸ்டோர் கீப்பர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் முகாமிலும் கலந்துகொள்ளலாம்.
இந்த முகாமில் 17 ஆண்டு 6 மாதம் முதல் 23 வரை வயதுடைய ஆண்கள் கலந்துகொள்ளலாம் என்றார் சுந்தரவல்லி.