முகப்பு
சென்னை

"தமிழகத்தில் 40%பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர்'

தமிழகத்தில் தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமே பெண்கள் வெறும் 40 சதவீதம் பேரே ள்ளனர் என சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை கூறினார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 3:23 am IST
பகிர்:

தமிழகத்தில் தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமே பெண்கள் வெறும் 40 சதவீதம் பேரே ள்ளனர் என சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை கூறினார்.

உலக தாய்ப்பால் வார விழா சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் கனகசபை பேசியது:

Advertisement

Advertisement

பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வெறும் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீரோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது.

தமிழகத்தில் 40 சதவீதம் பெண்கள் மட்டுமே தாய்ப்பால் மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். 60 சதவீதம் பெண்களில் சிலர் தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிபால், விளம்பரங்களில் காண்பிக்கப்படும் சத்து உணவுகளை கொடுக்கிறார்கள்.

இதனால் குழந்தைகள் பார்ப்பதற்கு புஷ்டியாகத் தெரிந்தாலும் அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். குழந்தைகள் வளர்ந்த பிறகும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். தாய்ப்பால் கொடுக்காமல் அதற்கு பதிலாக வேறு உணவுகளை கொடுக்கும்போது ஒவ்வாமை, நோய்த்தொற்று, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகிறது. இதனால் பிறந்த குழந்தைகள் இறக்க நேரிடுகிறது.

இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 48 ஆக இருக்கிறது. தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு 28 ஆக இருக்கிறது. அதிலும் பிறந்து ஒரு மாதத்துக்குள்ளான குழந்தைகளின் இறப்பு விகிதம் 18 ஆக இருக்கிறது. இதனை பத்துக்கும் கீழ் கொண்டு வர அரசு முயற்சி செய்து வருகிறது. தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கும்போது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தாய்ப்பால் கொடுக்க கொடுக்க பிரசவித்த பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கும் குறையும் என்றார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் மீனா உமாசந்தர், பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் பி.ஐ.சசிரேகா, பேராசிரியர் உமாசாந்தி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் மணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments