முகப்பு
தமிழ்நாடு

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருப்பது தொடர்பாக...

Updated On : 19 ஜூன் 2026, 1:40 pm IST
முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் - டிஎன்எஸ்
பகிர்:

மேக்கேதாட்டுக்கு எதிரான தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் அணையை திறப்பார்கள் அதுவரை தமிழ்நாடு பாலைவனமாகும். ஆகையால் தீர்மானம் மட்டும் போதாது. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது குறித்தும் இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவக்குமார் தொடர்ந்து பேசி வரும் நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய், மேக்கேதாட்டுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்.

Advertisement

Advertisement

இந்த தீர்மானம் குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது. அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேக்கேதாட்டுவை கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் அன்றைய முதல்வர் கிருஷ்ணா முதல் 6, 7 முதல்வர்களிடம் பேசிய உள்ளேன். தலைவர் கலைஞரும் பேசியிருக்கிறார். ஆகையால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். ஆகையால் அணையை கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள். "ஆகையால் தீர்மானத்தை வரவேற்கிறேன். அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்".

மேலும் எந்த கூட்டம் கூட்டினாலும், சட்டப்பேரையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதனுடைய உரிமை உச்ச நீதிமன்றத்தில்தான் உள்ளது. இது நமது வாழ்வாதார பிரச்னை. எந்தவிதமான கட்சி மனமாற்றங்களும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் பாதுகாக்க முடியும்.

கர்நாடகாவில் கட்சிகள் மோதிக் கொள்வதில்லை. இங்குதான் மோதிக் கொள்ளும் காட்சி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இதனை எதிர்க்க வேண்டும். அதை செய்வார்கள் என கருதுகிறேன்.

மேக்கேதாட்டு தொடர்பாக முதல் முறை ட்ரிபுனலுக்கு போவதில் இருந்து படிப்படியாக அனைத்தும் எனக்கு தெரியும். என்னோட, எங்களோட ரத்தத்தோடு கலந்து இருக்கிற விவகாரம் இது.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை இவர்கள் கூட்ட வேண்டும் அப்போதுதான் தீர்வு கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் சரியான வழக்குறைஞர்களை வைத்து தீர்க்கமாக வாதாட வேண்டும்.

சரியான வழக்குறைஞர்களை வைத்து சரியாக வாதாடி, சரியான நேரத்தில் மத்திய அரசுக்கு கிடுக்கு பிடி போட்டால் ஒழிய நம்மால் இதை சமாளிக்க முடியாது.

கர்நாடகம் திட்டம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல. இரண்டு மூன்று முறை திட்டம் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். ஆகையால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகம் ஆறு ஏழு கட்டங்களைத் தாண்டி வரணும். அதற்குள் அதனை தடுத்தாக வேண்டும்.

ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. நீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆகையால் பேச்சுவார்த்தைக்கு ஈடுபட்டால் நமக்கு இழப்புதான் ஏற்படும்.

மேலும், ஒரு முறை அல்ல, 36, 37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அதனால் பலன் எதுவும் இல்லை என அவர் கூறினார்.

summary

The Karnataka government will not yield by accepting the resolution says Former Minister Duraimurugan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments