முகப்பு
சென்னை

சாலை விபத்தில் இருவர் சாவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 4:24 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (42), இவரது நண்பர்கள் பாடியநல்லூரைச் சேர்ந்த பாஸ்கர் (30), மகேஷ்குமார் (35), மணிகண்டன் (18), மணிகண்டன் (எ) சரத்குமார் (18).

இவர்கள் 5 பேரும் ஆந்திர மாநிலம் வரதையப்பாளையம் அருகே உள்ள கோனே நீர் வீழ்ச்சியை சுற்றிப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை காரில் புறப்பட்டனர். ÷பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து அவர்களை 108 அவசர ஊர்தியில் ஏற்றி பொன்னேரி அரசு மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகேஷ்குமார், சரத்குமார் ஆகிய இருவரும் இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.