முகப்பு
சென்னை

ஆயுதங்களுடன் காரில் வந்த 8 பேர் கைது

சுங்குவார்சத்திரம் பகுதிகளில் ஆயுதங்களுடன் காரில் வந்த 8 பேரை ரோந்து பணியில் இருந்த போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 3:06 am IST
பகிர்:

சுங்குவார்சத்திரம் பகுதிகளில் ஆயுதங்களுடன் காரில் வந்த 8 பேரை ரோந்து பணியில் இருந்த போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே திங்கள்கிழமை ரூ. 3.5 கோடி மதிப்புள்ள தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போலீஸார் திங்கள்கிழமை தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் மின்வாரிய அலுவலகம் முன்பு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் சந்தேகப்படும்படியாக 8 பேர் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை விசாரித்தனர். அவர்கள் அந்த காரில் கத்தி, இரும்பு கம்பிகள் வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (எ) விஸ்வா (23), சத்தியராஜ் மகன் சுரேஷ் (30), ஏகாம்பரம் மகன் ராஜ் (27), கோபால் மகன் நாகராஜ் (26), திருவள்ளூர் அருள்திருமேணி மகன் வினோத்குமார் (26), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பாலன் மகன் மனோஜ் (23), ராஜேந்திரன் மகன் பார்த்திபன் (22), முருகேசன் மகன் மதிவாணன் (23) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 9 கொடியவகை கத்தி, 4 கம்பி மற்றும் டாடா சுமோ கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.