மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறேன்: உறுதி செய்த சிம்பு
மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் உறுதி செய்துள்ளார்.
சென்னை: மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் உறுதி செய்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’ இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமையன்று வெளியானது. அந்த நிகழ்வில் பேசிய சிம்பு கூறியதாவது:
ஈஸ்வரனுக்கு பிறகு நான் மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளேன். அதன்பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தப் படமானது இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும்.
Advertisement
Advertisement
இவற்றைத் தவிர மேலும் மூன்று படங்களில் நான் நடிக்க உள்ளேன். அந்தப் படங்களை இயக்கப்போவது யார் யார் என்பதைப் பற்றி பிறகு முறைப்படி அறிவிப்புகள் வெளியாகும்.
இவ்வாறு சிம்பு பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.