முகப்பு
செய்திகள்

நானே வருவேன்: தனுஷ் - செல்வராகவன் இணையும் படம்

தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்துக்கு நானே வருவேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 12:14 pm IST
பகிர்:

தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்துக்கு நானே வருவேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். அதேபோல செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்ஜிகே, செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கி இன்னும் வெளிவராத நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரு படங்களுக்கும் யுவன் தான் இசை. 

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா.

Advertisement

Advertisement

இந்நிலையில் தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்துக்கு நானே வருவேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் இரு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments