முகப்பு
சினிமா

நடிகை அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2013, 11:12 pm IST
பகிர்:

நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது சித்தி பாரதிதேவி தாக்கல் செய்துள்ள மனுவில், எனது தங்கை பார்வதி தேவியின் மகளான அஞ்சலியை நான் தத்தெடுத்தேன். அவரை எனது மகளாகவே கருதி, வளர்த்து வருகிறேன்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் களஞ்சியம் அறிமுகம் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அஞ்சலிக்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் நடைபெறும் ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக எனது கணவருடன் அஞ்சலி ஐதராபாத்துக்குச் சென்றிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அங்கு ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அஞ்சலியை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக நான் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். எனினும், அஞ்சலி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரை உடனடியாகக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பாரதிதேவி கோரியுள்ளார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.