முகப்பு
செய்திகள்

மாற்றப்பட்ட ஜிஎஸ்டி வரிகள்: திரையரங்குகளின் புதிய டிக்கெட் கட்டண விவரம்!

நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரூ. 150 ஆக உள்ள முதல் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் ரூ. 15 குறைக்கப்படவுள்ளது...

Updated On : 25 டிசம்பர் 2018, 11:05 am IST
பகிர்:

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டன. ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரூ.100-க்கும் அதிகமான கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. 

இதையடுத்து சினிமா டிக்கெட் கட்டணங்கள் குறையவுள்ளன.

நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரூ. 150 ஆக உள்ள முதல் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் ரூ. 15 குறைக்கப்படவுள்ளது. ரூ. 120 ஆக விற்கப்படும் டிக்கெட் விலை, ரூ. 108 என மாற்றப்படும். ரூ. 100-க்கும் கீழே உள்ள டிக்கெட்டுகள் விலையிலிருந்து ரூ. 6 குறைக்கப்படும். 

Advertisement

Advertisement

சத்யம் சினிமாஸ், எஸ்கேப், பி.வி.ஆர். ஐநாக்ஸ் போன்ற மால் திரையரங்குகளில் இதுவரை ரூ. 180-க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ரூ. 165-க்கும் ரூ. 170 விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ரூ. 158-க்கும் விற்கப்படவுள்ளன. புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ரூ. 160 விலைக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ரூ. 130-க்கும் ரூ. 150-க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ரூ. 120-க்கும் விற்கப்படவுள்ளன. இந்த டிக்கெட் விலைகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments