kamal heroine 
செய்திகள்

சிபிராஜுடன் இணையவிருக்கும் ‘கமல்’ நாயகி!

மீன் குழம்பும் மண் பானையும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படமொன்றில் குறிப்பிடத்தக்க வேடமொன்றில் நடிக்க 

சரோஜினி

விஸ்வரூபம் 1 & 2, மற்றும் உத்தமவில்லன் திரைப்படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தவர் நடிகை பூஜாகுமார். இவர் 90 பல காலம் முன்பே தமிழ் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமாகியிருந்த போதும் ரசிகர்களிடையே பரவலான அறிமுகம் பெற்றது கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில் முகம் காட்டிய பின்பே. கமலுடன் நடித்த பின்னரும் பெரிதாக இவரைத் தமிழ்த்திரைப்படங்களில் காண முடிந்ததில்லை. நடிகர் பிரபுவுக்கு இணையாக ‘மீன் குழம்பும் மண் பானையும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

kamal & pooja kumar in viswaroopam..

அதன் பின்னர் தற்போது நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படமொன்றில் குறிப்பிடத்தக்க வேடமொன்றில் நடிக்க ஒப்பந்தமாயிருப்பதாகத் தகவல். இதைப் பற்றி படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான ஜி தனஞ்ஜெயன் கூறுகையில்.. தயாரிப்பில் இருக்கும் ‘கபடதாரி’ திரைப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரம் நடிகை பூஜா குமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கதைப்படி அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய திருப்புமுனைக்கு காரணமாக அமையும் படி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சிபிராஜ், நந்திதா நாயக, நாயகியாக நடிக்கவிருக்கும் கபடதாரி ஒரு ஆக்‌ஷன் திரில்லர் வகைத்திரைப்படம். 

படத்தின் இயக்கநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பு சிமோன் கிங்.

இத்திரைப்படத்தில் சிபிராஜ், நந்திதா, பூஜாகுமார் தவிர நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் உண்டு என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

நடிகை பூஜாகுமார், தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலங்களில் அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT