முகப்பு
செய்திகள்

மாமனிதன் படத்தில் நடித்த சிறுவன் இந்த இயக்குநரின் மகனா ?

மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த சிறுவன் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 24 ஜூன் 2022, 4:41 pm IST
பகிர்:

மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த சிறுவன் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் இன்று (ஜூன் 24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். 

சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, ஜுவல் மேரி, குரு சோமசுந்தரம், கேபிஏசி லலிதா, அனிகா, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக தமிழ் என்ற சிறுவன் நடித்திருந்தான். இவன் இயக்குநர் வ.கௌதமனின் மகன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முரளி - சிம்ரன் இணைந்து நடித்த கனவே கலையாதே படத்தை இயக்கிய கௌதமன், சீமான், அஞ்சலியுடன் இணைந்து மகிழ்ச்சி என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments