பெண் குழந்தைக்கு அம்மாவான சின்னத்திரை நடிகை நீலிமா
சின்னத்திரை நடிகை நீலிமா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், கோலங்கள், செல்லமே உள்ளிட்ட தொடர்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றன.
சின்னத்திரை தொடர்கள் மட்டுமில்லாமல் மொழி, நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அரண்மனைக் கிளி என்ற தொடரில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க | மகள் மற்றும் பேத்தியுடன் நடிகர் விஜயகுமார்: அச்சு அசல் அம்மாவைப் போல மகள்
Advertisement
Advertisement
இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி, கடந்த 5 ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.