விவாகரத்து முடிவைக் கைவிடும் தனுஷ் - ஐஸ்வர்யா?
நடிகர் தனுஷூம் அவர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களின் விவாகரத்து முடிவைக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷூம் அவர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களின் விவாகரத்து முடிவைக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். 18 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்த இந்த இணை திடீரென பிரிவதாக அறிவித்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அப்போது, தனுஷ் வெளியிட்ட பதிவில்,
Advertisement
Advertisement
நண்பர்களாகவும் தம்பதிகளாகவும் குழந்தைகளுக்கு பெற்றோராகவும் பாதுகாவலர்களாகவும் ஒன்றாக பயணித்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது எங்கள் பாதை தனித்தனியாக பிரிய வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கான நேரத்திற்காக நானும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.
எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுத்து, இந்த சூழலை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதனை இயக்குநரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யாவும் அறிக்கையாக வாயிலாக உறுதிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் , தற்போது கணவன் - மனைவிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைப் பேசி தீர்க்கலாம் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளதாகவும் அதனால் இருதரப்பிலிருந்தும் விவாகரத்து மனுவை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.