முகப்பு
செய்திகள்

ஸ்ருதி ஹாசனின் புதிய டாட்டூ: காரணம் என்ன தெரியுமா 

நடிகை ஸ்ருதி ஹாசனின் தனது புதிய டாட்டூ குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

Updated On : 24 ஏப்ரல் 2023, 7:32 pm IST
பகிர்:

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் கடவுள் நம்பிக்கையில்லாதவர். ஆனால் ஸ்ருதிஹாசன் கடவுள் நம்பிக்கையுள்ளவர். தற்போது அவரது முதுகில் அவரது பெயருக்கு மேலாக வேல் படத்தினை பச்சை குத்தியுள்ளார். இது குறித்து ஸ்ருதி கூறியதாவது: 

Advertisement

Advertisement

நான் எப்போதும் கடவுள் நம்பிக்கையுள்ள நபர். கடவுள் முருகருக்கு எனது இதயத்தில் ஸ்பெஷலான இடமிருக்கிறது. இதை வெளிக்காட்டவே இந்த டாட்டூவை இப்படி பச்சை குத்தியுள்ளேன். வேறெந்த காரணமும் இல்லை. நான் எப்போதும் தெய்வ பக்தியுடன் இருக்கிறேன். இந்த டாட்டூ எனக்கு அதிகமான சக்தியை அளிக்கிறது. பாதுகாப்பாகவும் அடக்கத்துடனும் இருக்க வேண்டுமென நியாபகப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments