கிங்க் ஆஃப் கோதா - சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்!
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங்க் ஆஃப் கோதா’ திரைப்படத்தில் பிரபல நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான், அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் ’கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. நாளை மறுநாள்(ஆக.24) ஓணம் வெளியீடாக தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: விஷ்ணு விஷால் - ராம்குமார் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.