கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள "கழுவேத்தி மூர்க்கன்" திரைப்படம் மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள "கழுவேத்தி மூர்க்கன்" திரைப்படம் மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
அருள்நிதி, துஷாரா விஜயன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். ராட்சசி பட இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான "டாடா" படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதேபோன்று இந்தப் படத்திற்கும் அதே தயாரிப்பாளர் என்பதால் ரசிகர்களிடையே கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய நாகூரன் எடிட் செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இணையத்தில் அதிக கவனம் பெற்றதையடுத்து, மே 26-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.