முகப்பு
செய்திகள்

கடும் உடற்பயிற்சியில் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

Updated On : 20 செப்டம்பர் 2023, 11:57 am IST
பகிர்:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததற்குப் பின் பிரபலமான இவர் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். 

அந்த வகையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து ராஷ்மிகா அதிகமான ரசிகர்களைக் கவர்ந்ததுடன் அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

இதையும் படிக்க: 800 -வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து, தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்து பிரபலமானார்.தற்போது, ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ராஷ்மிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

உடலை கவனமாகப் பேணும் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments