முகப்பு
செய்திகள்

புதிய தொடர் அறிவிப்பு: நிறைவடையும் பிரபல சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர் நிறைவடையவுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2024, 2:17 pm IST
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த தொடர் ஜூலை 12, 2021 முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் நடிகர்கள் தீபக் தினகர், நக்ஷத்ரா நாகேஷ், ரேகா கிருஷ்ணப்பா, மீரா கிருஷ்ணா, நவீன் வெற்றி, லாவண்யா மாணிக்கம் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தத் தொடரில், தீபக் தினகர் தமிழ் பாத்திரத்தில் நடித்து வருகிறார், சரஸ்வதியின் பாத்திரத்தில் நக்ஷத்ரா நாகேஷ் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

தமிழும் சரஸ்வதியும் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இத்தொடர் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதால், இதற்கு பதிலாக இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் நடிகர் திரவியத்தின் புதிய சீரியலான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில், நடிகர் திரவியமிற்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். மேலும், இத்தொடரில் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் பாத்திரத்தில் நடித்த சுதிஷ், அவினாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இத்தொடரில் வில்லியாக பாண்டவர் இல்லம் தொடரில் மல்லிகா பாத்திரத்தில் நடித்த நடிகை ஆர்த்தி நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.