தக் லைஃப் படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை!
தக் லைஃப் படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தக் லைஃப் படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
Advertisement
Advertisement
தக் லைஃப் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: நாளை வெளியாகும் 4 தமிழ்ப் படங்கள்!
இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.