முகப்பு
செய்திகள்

திரில்லர் படமாக உருவாகும் சூர்யா - 45?

Updated On : 19 அக்டோபர் 2024, 9:15 pm IST
பகிர்:

சூர்யாவின் 45-வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், சூர்யா - 45 திரைப்படம் திரில்லர் பாணி கதையாக உருவாகவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.