முகப்பு
செய்திகள்

சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு?

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 11 செப்டம்பர் 2024, 9:45 pm IST
சுந்தர் சி, வடிவேலு.
பகிர்:

நகைச்சுவை நடிகராக தன் பயணத்தை தொடங்கிய நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம்.

சிலகாலம் நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வித்தியாசமாக நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

தற்போது, சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவான வின்னர், கிரி, நகரம் படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகின்றன.

இந்தக் கூட்டணி உறுதியானால் நிச்சயம் வடிவேலுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகராகவும் நடித்துவரும் சுந்தர். சி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னொன்று வெளியீட்டுக்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments