முகப்பு
செய்திகள்

சண்முக பாண்டியனின் படை தலைவன் வெளியீட்டுத் தேதி!

படை தலைவன் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

Updated On : 7 ஜூன் 2025, 7:49 pm IST
பகிர்:

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.

அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. தொடர்ந்து, இப்படம் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் 500 திரையரங்கில் வெளியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments