முகப்பு
செய்திகள்

தி கேரளா ஸ்டோரி - 2: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தி கேரளா ஸ்டோரி - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 28 ஏப்ரல் 2026, 12:22 pm IST
தி கேரளா ஸ்டோரி - 2 போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

தி கேரளா ஸ்டோரி - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஹிந்து மத பெண்கள் சிலர் திருமணத்துக்குப் பிறகு இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சோ்க்கப்படுவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியானது.

Advertisement

Advertisement

காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.

முதல் பாகத்தினைப் போலவே இதிலும் சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் பலரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இப்படத்திற்கு எதிர்ப்பு குரல் பதிவானதும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறியதும் இந்தப் படத்திற்கு பெரிய பின்னடவையாக அமைந்தது.

இந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

summary

The OTT release date for The Kerala Story 2 has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.