யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நடிகர் யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இதில், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.
கதையம்சமுள்ள இயக்குநர் எனப் பெயரெடுத்த சுரேஷ் சங்கையா, கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2024-ல் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இறப்புக்கு முன், நடிகர் யோகி பாபுவை வைத்து ‘கெணத்த காணோம்’ என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
இந்தப் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவான இந்தப் படம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு கெணத்த காணோம் திரைப்படம் வரும் வரும் ஜூன் 16 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for actor Yogi Babu's film Kenathai Kaanom has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.