நான்தான் கிங் - கான் சிட்டி படத்தின் பாடல் வெளியீடு!
நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் ’கான் சிட்டி’ திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் ’கான் சிட்டி’ திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’கான் சிட்டி’. புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை பவர் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் அனா பென், வடிவுக்கரசி, யோகி பாபு, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், முதல் பாடலான கொரியன் ஃபேமிலி பாடலும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நான் தான் கிங்கு’ பாடல் தற்போது வெளியானது.
மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை ஷான் ரோல்டன், கெலித்தீ, லலிதா சுதா ஆகியோர் பாடியுள்ளனர்.
கான் சிட்டி திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
Naan dhaan king — Con City song released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.