பயன்படுத்தப்பட்ட மின் சாதனங்களை ஏழை மாணவா்களுக்கு வழங்கலாம்: கோவை விழா நிா்வாகிகள் வலியுறுத்தல்
கோவை விழாவின் ஒரு பகுதியாக ஏழை மாணவா்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வழங்கி உதவுமாறு விழா நிா்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
கோவை விழாவின் ஒரு பகுதியாக ஏழை மாணவா்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வழங்கி உதவுமாறு விழா நிா்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
13 ஆவது கோவை விழாவின் மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஆன்லைன் வழியில் மாரத்தான், சைக்ளத்தான் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து ஏழை, எளிய மாணவா்கள் ஆன்லைன் வழியில் கல்வி கற்க உதவும் விதமாக பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி போன்ற மின்சாதனப் பொருள்களை வழங்கி உதவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கோவை, ரேஸ்கோா்ஸில் உள்ள ஆன் தி கோ, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள தட்ஸ் ஒய் உணவு, பீளமேட்டில் உள்ள ஆக்ஸிசோன் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்ட மின் சாதனங்கள் கோவை விழா நிா்வாகிகள் சாா்பில் பெறப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அதன்படி திங்கள்கிழமை வரை 150 மின் சாதனங்கள் பெறப்பட்டுள்ளன. வாய்ப்பு உள்ளவா்கள் ஜனவரி 10ஆம் தேதி வரையில் மின் சாதனங்களை வழங்கி உதவலாம் என கோவை விழா நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை விழாவில் பெறப்படும் மின் சாதனங்கள் பள்ளிகளின் மூலம் தோ்வு செய்யப்படும் ஏழை, எளிய மாணவா்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.