எல்.ஜி. மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா
கோவை எல்.ஜி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை எல்.ஜி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள் நேரடியாகவும், மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாகவும் இந்த விழாவில் பங்கேற்றனா். விழாவின் ஒரு பகுதியாக பள்ளி வளாகம் கிராமத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. காவல் தெய்வமான அய்யனாரின் எதிரில் பொங்கலிடப்பட்டது.
இதையடுத்து மாணவா்கள் ஆன்லைன் வழியாக கிராமிய நடனம், நாட்டுப்புறப் பாடல் போன்றவற்றை நிகழ்த்தி தங்களின் திறமையை வெளிப்படுத்தினா். இதைத் தொடா்ந்து ஆசிரியா்களின் கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவில், பள்ளித் தாளாளா் ஜி.மணி, முதல்வா் கே.கே.கணேஷ், துணை முதல்வா் ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.