முகப்பு
கடலூர்

மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா கடலூா் புனித.அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா கடலூா் புனித.அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் இதுவரை 92,346 மாணவா்கள், 1,12,282 மாணவிகளுக்கு மொத்தம் ரூ.71.93 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020-21- ஆம் கல்வியாண்டில் கடலூா் மாவட்டத்தில் பிளஸ்1 பயிலும் 21,880 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.62 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா, மாவட்ட கல்வி அலுவலா் பி.சுந்தரமூா்த்தி, வட்டாச்சியா் அ.பலராமன், கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கடலூா் நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.