முகப்பு
தினமணி கதிர்

சிரி.. சிரி.. சிரி..

"பையன் பேரிலே நிறைய பணம் போட்டதை அவன் மேஜரானாதான் எடுக்க முடியும்னு பேங்கில சொல்லிட்டாங்களாம்''

Updated On : 1 ஜூன், 2013 at 4:09 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

""என்ன தரகரே என் பொண்ணுக்கு போஸ்டர் ஒட்டுற ஆசாமியை மாப்பிளையா கொண்டு வந்திருக்கிற?''

""நல்ல பசையுள்ள இடமா வேணும்னு நீங்க தானே சார் சொன்னீங்க''

எம்.சோமசுந்தரம், பொன்னமராவதி.

Advertisement

""உங்க மனைவி படத்தை ஏன் பைக்ல ஒட்டி வெச்சிருக்கீங்க?''

""படத்தைப் பார்த்துக்கிட்டே ஒரே ஒரு உதை விட்டாப் போதும் உடனே ஸ்டார்ட் ஆயிடும்''

பி.பரத், சிதம்பரம்.

""ஊருக்குப் போய் சேர்ந்ததும் போன் போடு லதா''

""ஏங்க?''

""அப்பத்தான் எனக்கு முழுச் சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கும்''

எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.

""எல்லாரும் தூங்கி வழியிறாங்களே என்ன கூட்டம் நடக்குது?''

""விழிப்புணர்வு கூட்டமாம்''

""கிரிக்கெட் வீரர் எப்படி பேசினார்?''

""ரொம்ப ஓவராக''

எஸ்.மோகன், கோவில்பட்டி.

""நம்ம தலைவர் ஏன் திடீர்னு அவர் பையனை மிலிட்டரியில் சேர்த்துட்டாரு''

""பையன் பேரிலே நிறைய பணம் போட்டதை அவன் மேஜரானாதான் எடுக்க முடியும்னு பேங்கில சொல்லிட்டாங்களாம்''

கே.நேசினி, ஓரக்கலியூர்.

""கிளாஸ்ல உங்க பையன் ரொம்பவும் பேசுறான் சார்''

""வீட்ல இவன் அம்மா பேசுறதைக் கேட்டால் இப்படியெல்லாம் சொல்ல மாட்டீங்க டீச்சர்''

""மன்னர் ஏன் புலவரைக் கசையால் அடிக்கிறார்?''

""கஜானா காலி என்று மன்னர் கூறினதுக்கு "கஜானாவும் உங்கள் தலையும் ஒன்றுதான்' என்று கூறினாராம் புலவர்''

மன்னர்: வாக்கிங், ரன்னிங் எது சிறந்தது வைத்தியரே?

வைத்தியர்: உடலுக்கு என்றால் வாக்கிங், உயிருக்கு என்றால் ரன்னிங்தான் மன்னா!

""மன்னருக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது''

""எப்படிச் சொல்கிறாய்?''

""குலோத்துங்கன் என்ற பெயரை குலோத்துங்"கான்' என்று மாற்றிவிட்டாரே!''

""தலைவர் ஒரு தாவுகிராக்கி''

""தாவு கிராக்கின்னா?''

""அடிக்கடி கட்சி விட்டு கட்சி தாவுகிறார்னு சொன்னேன்யா!''

""டாக்டர் ஒரு சாப்பாட்டு ராமர்''

""எப்படிச் சொல்றே?''

""இங்கு அறுசுவையிலும் மாத்திரைகள் கிடைக்கும்னு போர்டு போட்டிருக்காரே!''

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

""என்னப்பா இது வயித்திலேருந்து புகை வருது?''

""நான்தான் சொன்னேனே டாக்டர் வயிறு எரியுதுன்னு!''

ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

""குடும்பம் ஒரு கோவில்னு சொன்னது தப்பாப்போச்சு''

""ஏன்?''

""வாசல்ல உண்டியல் வெச்சிட்டாங்களே!''

எஸ்.சடையப்பன்,  திண்டுக்கல்.

""தினமும் காலையும் மாலையும் வந்து போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்து போட்டுட்டுப் போகணும் தெரியுதா?''

""சரிங்கய்யா...அப்புறம் வழக்கம் போல திருடப் போகலாங்களா?''

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

""வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா என் மனைவிக்குப் பிடிக்காது!''

""இது பரவாயில்லையே என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது!''

""மரத்தடியில் உட்கார்ந்து சீட்டு ஆடுறீங்களா? வாங்கடா ஸ்டேஷனுக்கு...''

""பரவாயில்லீங்க...இங்கயே வசதியாத்தான் இருக்கு''

""ஏங்க என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?''

""சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்''

புருஸ்லீ ஓவியாலயம், நாட்டரசன்கோட்டை.

""ரொம்ப வருஷமா எங்க குடும்பம் "கவுரவம்' பார்க்கிற குடும்பம்!''

""அடப்பாவிங்களா! எத்தனை வருஷமாய் ஒரே படத்தை பார்த்துகிட்டு இருப்பீங்க?''

""அந்தப் பால் ஊத்தற பொண்ணு எனக்கு சின்ன வயசுல இருந்தே பழக்கம்!''

""அப்ப "பால்'ய சிநேகிதின்னு சொல்லு!''

""தூக்கத்தில் நடக்கிற பழக்கம் இப்போ எப்படி இருக்கு? மருந்து கொடுத்தேனே, வேலை செய்யுதா?''

""நல்லா வேலை செய்யுது டாக்டர். நான் தூக்கத்துல நடக்கிறதே இல்லை. இப்போதெல்லாம் சைக்கிள் எடுத்திட்டு ஒரு ரவுண்ட் போய் வர்றேன்''

போளூர் சி.ரகுபதி.

""உன் புருஷன், என்கிட்ட அடியாள் இருக்குன்னு பீத்திகிட்டுத் திரியுராறே! யாருடி அது?''

""வேற யாரு? அவரை அடிக்கிற அடியாள் அடியேன்தான்''

""பிரபு! ஏன் லேட்டு?''

""சித்ரகுப்தா! எமனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓமனுக்குச் சென்றுவிட்டான் ஒரு நரன்! விடுவேனா நான்''

மாயாண்டி சந்திரசேகரன்,

திருநெல்வேலி.

""மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?''

""சாப்பாடு பிரமாதம். என் கல்யாணத்துக்கு நீயும் மொய் வைக்க வேண்டாம்னு எழுதியிருக்கு''

""நீச்சல் குளம் கட்டறதுக்கு நன்கொடை கேட்டு வந்திருக்காங்க''

""ஒரு மக் தண்ணீர் கொடுத்து அனுப்புடா!''

ஏ.விக்டர் ஜான், சென்னை.

""என்னப்பா மேடையில பேசும்போது ஓடா வந்து விழுது?''

""ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க தலைவரே!''

""என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் ஏன் வரல?''

""வரணும்னுதான் நினைச்சேன், அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சு, என்ன செய்ய?''

வசந்தா மாரிமுத்து, சென்னை.

""நான் பல்லைப் பிடுங்கும்போது வலியே இருக்காது தெரியுமா?''

""ஆனா, நீங்க அதுக்கான ஃபீûஸ சொல்லும்போது நெஞ்சுவலியே வந்துடும்னு பேசிக்கறாங்களே டாக்டர்''

ச.வளர்மதி, ஈரோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.