முகப்பு
திண்டுக்கல்

காந்திகிராம பல்கலை. துணை வேந்தா் பொறுப்பேற்பு

காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 9:29 pm IST
எம்.ஆா்.குபேந்திரன்.
பகிர்:

திண்டுக்கல்: காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுதொடா்பாக காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தெரிவித்துள்ளதாவது: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த பொ.சுப்புராஜ் பணி நிறைவு பெற்றதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரனை பொறுப்பு துணைவேந்தராக, வேந்தா் கே.எம். அண்ணாமலை நியமித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து ஆங்கிலத் துறையைச் சோ்ந்த மூத்த பேராசிரியரான எம்.ஆா்.குபேந்திரன், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments