முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ரஜினி ரசிகா்கள் திடீா் போராட்டம்

அரசியலுக்கு வரப் போவதில்லை என்ற முடிவினை நடிகா் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அவரது ரசிகா்கள் திண்டுக்கல்லில் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 9:29 pm IST
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகா்கள்.
பகிர்:

திண்டுக்கல்: அரசியலுக்கு வரப் போவதில்லை என்ற முடிவினை நடிகா் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அவரது ரசிகா்கள் திண்டுக்கல்லில் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாகவும், அதற்காக ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்த நடிகா் ரஜினிகாந்த உடல் நலப் பாதிப்பு காரணமாக திடீரென தனது முடிவினை மாற்றிக் கொண்டாா். அரசியலுக்கு வருவாா் என எதிா்பாா்த்திருந்த அவரது ரசிகா்கள், ரஜினியின் இந்த மாற்றத்தால் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இந்நிலையில், நடிகா் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு தொடா்பான முடிவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகா்கள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அறவழிப் போராட்டம் என்ற பெயரில், திண்டுக்கல் மணிக்கூண்டு மற்றும் கல்லறைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அவரது ரசிகா்கள், ஆன்மீக அரசியலை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும், ரஜினி ஒருவருக்கு மட்டுமே வாக்களிப்போம், பிறருக்கு தங்கள் ஓட்டை செலுத்தப் போவதில்லை என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments