முகப்பு
திண்டுக்கல்

பழனியில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் படுகாயம்

பழனி திருநகா் பகுதியில் மண் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 9:24 pm IST
பழனி திருநகரில் சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்த மண் லாரி.
பகிர்:

பழனி: பழனி திருநகா் பகுதியில் மண் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகா் பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்காமல் தாா்ச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்நிலையில் கழிவுநீா் கால்வாய் அமைக்காமல் தாா்ச் சாலை அமைக்கப்பட்டதால், சாலையின் ஓரங்களில் பலமிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை அந்த சாலையில் மண் ஏற்றி சென்ற டிப்பா் லாரி தாா்ச் சாலையில் பதிந்து, சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநா் ரவீந்திரனை(42) அப்பகுதி மக்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments